u/sasi_k_chandran

பசித்த மானிடம்

பசித்த மானிடம்

பேராசையால் தொடங்கும் இரு மனிதர்களின் வாழ்க்கை ஆசை துறந்து தூய நிலையில் எப்படி செல்கிறது என்பதை கரிச்சான் குஞ்சு எந்த மறைவுமின்றி நம்முன்னே காட்டுகிறார்...

எவரும் கையாள யோசிக்கும் கலம் . வாசியுங்கள்

வாசிப்பு பரவட்டும்

u/sasi_k_chandran — 8 days ago

அர்த்தநாரி

மாதொருபாகனின் நீட்சி இந்த புத்தகம்..

u/sasi_k_chandran — 1 month ago

மாதொருபாகன்

திருமணம் என்றாலே குழைந்தையில் மட்டும் அடங்கிவிடுமா?

கணவன் மனைவியாக இருவர் மட்டும் வாழ்ந்தால் ஏன் இன்னமும் "குழந்தை இல்லையா?" என்ற கேள்வியை இச்சமூகம் கேட்டுக் கொண்டே இருக்கிறது?

குழந்தை வரனுக்காக ஒரே இடத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளாக முன்னேற்றமே அடையாமல், அடையவிடாமலும் தவிக்கும் தம்பதியின் கதை..

இன்றும் எத்தனை காளியும் பொன்னாவும் நம் சமூகத்தில் சுய முடிவை எடுக்க முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்களோ...

மாதொருபாகன்

Mathorubagan

u/sasi_k_chandran — 1 month ago
▲ 41 r/TamilBooks+1 crossposts

ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்

ஒரு சமூகமாக நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுக்கொண்டே இருக்கிறேம் எப்பதை சில புத்தகங்கள் நமக்கு எடுத்துச் சொல்லும்.. அப்படிபட்ட ஒரு புத்தகம் தான் இது.

அதிகாரத்தில் அமர்ந்து அறத்திற்காக போராடுவதை விடுத்து தன் சுய முன்னேற்றதுக்கும், இன்பத்துக்கும், ஜாதிக்கும் வேலை பார்க்கும் அதிகாரிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது .. பெயருடன்..

அரசும், தலைவர்களும், அதிகாரிகளும் தன் பக்கம் ஒருமுறை திரும்பி பாருங்கள்!!! என்று சிறைக்குள் காத்திருக்கும் அதே அரசால்,தலைவர்களால்,அதிகாரிகளால் ஏமாற்றப்பட்ட மனிதனின் நினைவுக்கு குறிப்பு இது..

உடனே பிரபலமாக கத்தி,கஞ்சா,அடிதடி யில் ஈடுபடும் இளய, துடிப்பான தலைமுறை ஒரு முறை இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள்..

ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்..

Oru Thooku Kaithiyin Vaakumoolam..

வாசிப்பு பரவட்டும்..

u/sasi_k_chandran — 1 month ago