திருக்குறளை அணுகுவது எப்படி??
வணக்கம் நண்பர்களே,
எனக்கு திருக்குறளை படித்து, அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு, வாழ்க்கையில் பயன்படுத்திக் கற்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் ஒரு சந்தேகம் இருக்கிறது.
திருக்குறளில் 1330 குறள்கள் இருக்கின்றன. நான் தினமும் ஒரு குறள் படித்தால், அதன் அர்த்தத்தை புரிந்தாலும், சில நாட்களில் பழைய குறள்களின் அர்த்தம் மறந்து போகும் போல தோன்றுகிறது.
அதனால் திருக்குறளை எப்படி கற்க வேண்டும்?
- வரிசையாக (1 முதல் 1330 வரை) தொடர்ந்து படிக்க வேண்டுமா?
- இல்லையெனில், அந்த நேரத்தில் வாழ்க்கையில் என்ன உணர்வு அல்லது பிரச்சனை இருக்கிறதோ அதற்கு சம்பந்தப்பட்ட குறள்களை மட்டும் தேடி படிக்க வேண்டுமா? (உதா: தனிமை, நட்பு, கோபம், முயற்சி, காதல் போன்றவை)
- குறள்களை மனப்பாடம் செய்ய முயற்சி செய்ய வேண்டுமா?
திருக்குறளை உண்மையாக கற்றவர்கள் அல்லது தொடர்ந்து படிப்பவர்கள் எப்படி அணுகுகிறீர்கள்? உங்கள் முறைகள் மற்றும் ஆலோசனைகள் இருந்தால் பகிருங்கள் 🙏
Edit: I am speaking about books.